போட்டோக்களில் சிறு சிறு மாற்றங்கள் செய்திடவும். படத்தினை மேலும் தரம் உயர்த்தவும் நேரடியாக பிரிண்ட் செய்திடவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 38 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்து உங்கள்புகைப்படங்களுக்கான இடத்தினை தேர்வு செய்யவும்.
இதில் வலதுபுறம் எடிட் மெனு இருக்கும் அதனை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் red eye.retouch.brush.crop என நான்கு டேப்புகள் கொடுத்துள்ளார்கள். தேவையானதை தேர்வு செய்திட அதற்கான விண்டோ உங்களுக்கு ஓப்பன் ஆகும். அதில் எந்த எந்த மாற்றங்கள் செய்யவிரும்புகின்றீர்களோ அதனை செய்துவிட்டு சேவ் செய்துவிடவும். நீங்கள் தேர்வு செய்த போல்டருக்கான புகைப்படங்கள் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோவில் தெரியவரும்.
தம்ப்நெயில் வியூவில் தெரியும் புகைப்படத்தின் மீது டபுள் கிளிக் செய்திட உங்களுடைய படம் மெயின் விண்டோவில் டிஸ்பிளே ஆகும். மாற்றங்கள்எந்த எந்த புகைப்படங்களுக்கு செய்ய விரும்புகின்றீர்களோ அதனை செய்து முடித்ததும் நீங்கள் அடுத்துள்ளபிரிண்ட் ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ளலாம். அதில் வரும் விண்டோவில் உங்களுக்கு ஸ்கேல் ஆப்ஷன் கொடுத்துள்ளார்கள். பிரிண்ட் செட்டிங்ஸ்ம் கொடுத்துள்ளார்கள். தேவையான செட்டிங்ஸ் மாற்றி பிரிண்ட் எடுத்துக்கொள்ளளலாம். பிடிஎப் பைலாக புகைப்படத்தினை மாற்றும் வசதியும் இதில் உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment