வேலன்:-கணிணி மூலம் வாட்ஸ்அப் கையாள

இப்போது எல்லோரும் வாட்ஸ்அப் உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோருக்கும் வாட்ஸ்அப் மூலம் உடனடி தகவல் பரிமாரபடுகின்றன. கைப்பேசி  தகவல்களை நாம் நமது கணிணி மூலமும் கணிணி மூலம் வாட்ஸ்அப் தகவல்களை கைபேசிக்கும் அனுப்பிவிடலாம். 65 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 உங்கள் கைபேசியில் வாட்ஸ்அப் அப்ளிகேஷனை திறந்துகொண்டு இதில் வாட்ஸ்அப் வேப் பக்கத்தினை திறக்கவும். இப்போது உங்கள் கைப்பேசியில் ஸ்கேனர் ஒப்பன் ஆகும். அதன் மூலம் கணிணியில் உள்ள கியூஆர் கோடினை ஸ்கேன் செய்யவும். சில நொடிகளுக்கு பின்னர் உங்கள் வாட்ச்அப் தகவல்கள் கணிணியுடன் இணைக்கப்படும்.
இதில் உங்கள் கைப்பேசியில் உள்ள தகவல்கள் உங்கள் வாட்ஸ்ப்பில் உள்ள நண்பர்கள் விவரம் இடது பக்கமும் நீங்கள் தேர்வு செய்த நண்பரின் வாட்ஸ்அப் தகவல்கள் வலதுபுறமும் தெரியவரும்.  தேவையான தகவலை டபுள் கிளிக் செய்திட உங்களுக்கான வீடியோவோ புகைப்படமோ தகவல்களோ ஓப்பன் ஆகும்.
அதுபோல நீங்கள் கணிணியில் இருந்து வாட்ஸ்அப்பிற்கு தகவல்கள் பரிமாற விரும்பினால் இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து வீடியோ புகைப்படங்கள் தகவல்களை அப்லோடு செய்துவிடலாம். கைப்பேசியை விட துரிதமாக இதில் அனுப்பலாம். அதுபோல தட்டச்சு செய்வதும் கைப்பேசியை விட கணிணி சுலபமானது. பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...