இணைய நூலகத்தில் இருந்து புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய இந்த இணையதளம் உதவுகின்றது. இதன் இணையதளம் சென்று பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதன் தேடுதல் பட்டையில் உங்களுக்கு தேவையான புத்தகத்தின் பெயர்,அல்லது ஆசிரியர் பெயர் அல்லது பதிப்பகத்தின்பெயர் அல்லது குறிப்பினை வைத்து தேடலாம்.
உங்களுக்கான பெயரினை நீங்கள் தட்டச்சு செய்து தேடல் பட்டனை கிளிக் செய்ததும் உங்களுக்கு நீங்கள் குறிப்பிட்ட புத்தகத்தின தலைப்பில் பெயரில் உள்ள புத்தகங்கள் அனைத்தும் உங்களுக்கு தெரியவரும்.தேவையான புத்தகத்தினை நீங்கள் கர்சர் மூலம் டபுள் கிளிக் செய்திட உங்களுக்கு புத்தகம் டிஸ்பிளே ஆகும். உங்களுக:கு அந்த புத்தகம் தேவையிருப்பின் அதில் உள்ள GET என்பதனை கிளிக் செய்யவும்.
சில நொடிகளில் உங்களுக்கான புத்தகம் பதிவிறக்கம் ஆக ஆரம்பிக்கும். நீங்கள்டவுண்லோடு பக்கத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான புத்தகம் இருப்பதனை காணலாம். மேலும் இந்த நூலகத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் விருப்பப்பட்டால் உங்களுடைய புத்தகத்தினையும் இதில் அப்லோடு செய்து சேர்க்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment