சில அப்ளிகேஷன்கள் சமர்ப்பிக்கும் சமயம் நமக்கு ஸ்டாம்ப் சைஸ் புகைப்படம் தேவைப்படும். இந்த அக்ஷன் டூலில் நாம் சுலபமாக ஸ்டாம்ப் சைஸ் கலர் மற்றும் கருப்பு வெள்ளை புகைப்படங்களை கொண்டுவரலாம்.
2 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை டவுண்லோடு செய்து போட்டோஷாப்பில் லோடுசெய்துகொள்ளுங்கள். இப்போது புகைப்படத்தை திறந்துகொள்ளுங்கள்.
இப்போது ஆக்ஷன் டூலை கிளிக் செய்யுங்கள். இதில் இரண்டு வகை ஆக்ஷன் டூல்கள் உள்ளது. ஒன்று கலர் புகைப்படம் எடுக்க. மற்றொன்று கருப்பு வெள்ளை படம் எடுக்க.இப்போது நான் கலர் புகைப்படம் எடுக்கும் ஆக்ஷன் டூலை தேர்வு செய்துள்ளேன்.அதை தேர்வு செய்ததும் உங்களுக்கு விண்டோவில் கிராப் டூலில் விண்டோ தோன்றும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
புகைப்படம் அளவிற்கு ஏற்ப விண்டோவினை நகர்த்தவும். சரியாக முகத்திற்கு ஏற்ப தேவையான அளவிற்கு அமைக்கவும்.
இப்போது Enter- என்டர் தட்டவும். நொடியில் உங்களுக்கு 18 ஸ்டாம்ப் சைஸ் புகைப்படங்கள் கிடைக்கும்.
இதைப்போலவே ஆக்ஷன் டூலில் கொண்டுவந்த கருப்பு வெள்ளை புகைப்படத்தையும் கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
மற்றும் ஒரு மாடல் படம் கீழே-
கருப்பு வெள்ளையில் படம் கீழே-
இதற்கு முன்னர் நான் பதிவிட்ட நொடியில் பாஸ்போர்ட் சைஸ்போட்டோ ரெடி செய்ய மற்றும் நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடி செய்ய எடுக்க பதிவுகளை பார்க்க சிகப்பு நிற தலைப்பில் கர்சரை வைத்து கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும். பதிவுகளை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.