Showing posts with label வேலன்.போல்டர் லாக்.velan.free software.windows xp.windows 7.vista.folder .folder lock box.. Show all posts
Showing posts with label வேலன்.போல்டர் லாக்.velan.free software.windows xp.windows 7.vista.folder .folder lock box.. Show all posts

வேலன்-இலவச போல்டர் லாக் பாக்ஸ்.

அலுவலகம் ஆகட்டும் - இல்லம் ஆகட்டும் - நமக்கு என்று தனிப்பட்ட தகவல்கள் நிச்சயம் இருக்கும். அதை மற்றவர்களிடம்இருந்து மறைத்து வைக்கலாம். ஆனால் இல்லாமல் செய்ய முடியுமா? முடியும். போல்டர்பாக்ஸ் எனப்படும் இதில் போல்டர்களை போட்டுவைத்து பின்னர் போல்டர்கள் தேவையானால் இல்லாமல் செய்து தேவைபடும்பேர்து பாஸ்வேர்ட் கொடுத்து ஓப்பன் செய்து பார்க்கலாம். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் உள்ள Set கிளிக் செய்தால் உங்கள் ஹார்ட்டிஸ்கில் உள்ள போல்டர்கள் ஓப்பன் ஆகும். தேவையான போல்டரை தேர்வு செய்துகொள்ளுங்கள். இதில் உள்ள Advanced கிளிக்செய்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் 8 டேப்புகள் இருக்கும்.இதன் Skin -ஐ வேண்டிய நிறத்திற்கு மாற்றிக்கொள்ளலாம்.  
நான் மாற்றிய கோல்டன் நிறத்தை கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பாஸ்வேர்டும் இதில் கொடுத்துதான் நாம் நமது தகவல்களை சேமிக்கவேண்டும்.நமது நினைவிற்கு தேவையான கேள்வியின் வாக்கியத்தை நாமே அமைத்து அதன் விடையை தட்டச்சு செய்தால்தான் நமக்கு போல்டர் ஓப்பன் ஆகும்படி செய்யலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். 
மற்ற சாப்ட்வேரில் இல்லாத கூடுதல் வசதி என்றால் நீங்கள் இதன்மூலம் லாக் செய்த போல்டரை தேவையான டிரைவில் சென்று தேடினாலும் கிடைக்காது. மறைந்து இருக்கும். மீண்டும் நீங்கள் பாஸ்வேர்ட் கொடுத்து அன்லாக் செய்து ஓப்பன்செய்தால்தான் உங்களுக்கு அந்த போல்டர் டிரைவில் தெரியும். பர்சனல் தகவல்கள் வைத்துகொள்ள விரும்புபவர்கள் இதனை உபயோகிக்கலாம்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

இதற்கு முன் பதிவிட்டபோல்டரை லாக் செய்ய -Folder Lock பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்.மற்றும் ஒரு பதிவான பைல் மற்றும் போல்டரை மறைப்பது எப்படி? பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...