Showing posts with label birthday. Show all posts
Showing posts with label birthday. Show all posts

பிறந்தநாள் முதல் இன்றுவரை உங்கள் வயதை அறிய-Easy way to Calculate your Age

பிறந்தநாள் முதல் இன்றுவரை உங்கள் வயதை அறிய
(Easy way to Calculate your Age)


நண்பர் ஒருவர் நம்மைபார்க்க வருகிறார்.
நண்பர்:- வணக்கம்..நலமா?
நாம்:- நலம். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?வீட்டில்
எல்லோரும் நலமா?
நண்பர்:-எலலோரும் நலம்.
இப்படி ஆரம்பித்த பேச்சின் நடுவே நமது நண்பர்
நமது வயதை கேட்கிறார்.
நண்பர்:- ஆமாம் உங்கள் வயது என்ன?
நாம்:- அது ஆவுது மூன்று கழுதை வயது?
நண்பர்:- அட ஒருகழுதைக்கு என்ன வயது -
அதை சொல்லுப்பா?
நண்பர்:- சரி அதை விடு. உனக்கு திருமணமாகி
எவ்வளவு நாள் ஆகின்றது.
நாம்:- அட நீ வேறே...அதையெல்லாம் ஞாபகப்படுத்தி
கொண்டு.....
நண்பர் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு விடைபெறுகிறார்.
சரி நமது வயது தான் என்ன, ? திருமணம் ஆகி எவ்வளவு
நாள் ஆகின்றது. நமது குழந்தைகளின் வயது என்ன?
நண்பர் சென்றதும் நாம் யோசிக்கின்றோம். நமது வயதை
தோராயமாக கணக்கிடலாம். ஆனால் வருடம்-மாதம்-
தேதி கணக்கிட என்ன செய்வது.? நமக்கு உதவ தான்
Excel உள்ளதே..அதில் வயதின் கணக்கு எப்படி போடுவது
என பார்ப்போம்.
முதலில் Excel ஓப்பன் செய்து கொள்ளுங்கள். இதன்
கீழ்புறம் பார்தால் உங்களுக்கு இந்த மாதிரி பக்க எண்
கிடைக்கும்.


அதில் உள்ள முதல் Sheet 1 மீது கர்சர்வைத்து ரைட்
கிளிக் செய்தால் உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன்
ஆகும்.


அதில் Rename என்பதை தேர்வு செய்து தமிழிலோ -
ஆங்கிலத்திலோ உங்கள் பெயரை தட்டச்சு
செய்யுங்கள். அதுபோல் இதர Sheet 2,Sheet 3,Sheet 4,
ஆகியவற்றில் உங்கள் மனைவிபெயர், மகள்,
மகன் பெயர்களை தட்டச்சு செய்யுங்கள். இறுதியாக
உள்ள Sheet-ல் உங்கள் திருமண நாள் தட்டச்சு
செய்யுங்கள்.


சரி . அடுத்து இப்போது தேதிக்கு வருவோம் . முதலில் உள்ள
A1 காலத்தில் உள்ள செல்லைதேர்ந்தேடுங்கள். பின்
உங்களுடைய பிறந்த தேதியை அதில் பதிவிடுங்கள்.
அடுத்து உள்ள A2 செல்லில் அன்றைய தேதியை
பதிவிடுங்கள். உங்களுக்கு தொடர்ந்து உங்களுடைய
வயதை தெரிந்துகொள்ள விரும்பினால் A2 செல்லில்
=now( ) என பதிவிடுங்கள்.

இப்போது நீங்கள் Enter தட்டினால் உங்களுக்கு அன்றைய
தேதி வரும்(உங்கள் கம்யூட்டரில் என்ன தேதி உள்ளதோ
அந்த தேதி வரும்)

சரி வயதை கணக்கிட என்ன செய்வது?
அடுத்து கர்சரை ஏதாவது ஒரு செல்லில் வைத்து
கீழ்கண்ட பார்முலாவை தவறில்லாமல் தட்டச்சு
செய்யவும்.
=DATEDIF(A1,A2,"y") & " years, " & DATEDIF(A1,A2,"ym") & " months, " & DATEDIF(A1,A2,"md") & " days"
மீண்டும் ENTER தட்டவும். உங்களுக்கு கீழ்கண்டவாறு
விடை கிடைக்கும்.

இப்போது உங்கள் வயது - மாதம் - நாட்கள் வந்து விட்டதா?
இதில் A2 செல்லில் நீங்கள் தேதியை குறிப்பிட்டால் அந்த
தேதிவரை விடையும் =now( ) என பதிவிட்டால் நாட்கள்
தினம்தினம் கூடிக்கொண்டே செல்வதை காணலாம்.
உங்கள் குடும்பத்தினர் அனைவரது பெயரையும் ஒரு
Excel Work Book-ல் பதிவிட்டு அந்த புத்தகத்துக்கு
பெயர் ஒன்று வைத்து உங்கள் டெக்ஸ்டாப்பில்
வைத்துவிடலாம். தேவைபடும் சமயம் அதை
கிளிக் செய்து நாட்களை பார்த்துக்கொள்ளலாம்.
ஜனனகாலம் முதல் இன்று வரை உள்ள உங்கள்
வயதை தெரிந்துகொண்டீர்கள். உங்கள் மரண
தேதியை அறிய ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்.
(புதியவர்கள் அங்கு சென்று பார்த்துக்கொள்ளவும்.)
மரண தேதியை அறிய கிளிக் செய்யவும்
பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஓட்டுப் போடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.


இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
உங்கள் செல்போனில் நீங்கள் சென்றஇடத்தில் டவர் இல்லையா? நீங்கள் 112 டயல்செய்தால் அருகில்உள்ள பிற நிறுவனத்தின் டவரில்இருந்து உங்களுடைய செல்போனுக்கு சிக்னல் கிடைக்கும். 

 
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

இ-மெயிலில் பூங்கொத்து அனுப்ப


இ-மெயிலில்பூங்கொத்து வாழ்த்துக்களை அனுப்பலாம்.

வழக்கமாக நாம் நண்பர் மற்றும் உறவினர்களுக்கு

வாழ்த்துக்களை இ-மெயிலில் அனுப்புவோம்.

ஆனால் இதையே வித்தியாசமாக பூங்கொத்துடன்

அனுப்பினால் பெறுபவர்கள் மிகுந்த மகிழ்சிஅடைவார்கள்.


முதலில் இந்த சாப்ட்வேரை நிறுவிக்கொள்ளவும்.

உங்களுக்கு இந்த மாதிரி முன்பக்கம் ஓப்பன் ஆகும்.


நீங்கள் அனுப்ப விரும்பும்பூங்கொத்தின் அடிப்பாகம் முதலில்

தேர்ந்தேடுங்கள்.






கூடுதல் புகைப்படங்களுக்கு More அழுத்தவும்.

வேண்டிய படத்தை தேர்வு செய்த பின் அதற்கு

மேற்புறம்பூச வேண்டிய வண்ணத்தை தேர்வு

செய்யவும். சரிபூங்கொத்தின் அடிப்பாகம்

ரெடி செய்து விட்டீர்கள் அல்லவா.

அடுத்து நீங்கள் இடப்புறம் உள்ள

மலர் வகைகளில் தேவையானதை தேர்வு

செய்யுங்கள்.




மலர்கள் தவிர இலை- இதர டிசைன் எது தேவையோ

அதை தேர்வு செய்யுங்கள்.பூங்கொத்து விருப்பமானதை

அலங்கரித்தபின் அடுத்து வலப்புறம் உள்ள டிசைனில்

சூழ்நிலைக்கு ஏற்ப டிசைன் ஒன்றை தேர்வு செய்யவும்.

அதற்கு பின்னணி வண்ணத்தையும் தேர்வு செய்யவும்.





பிறந்த நாள் என்றால் பரிசு பெட்டியையும் உடல்நிலை

சரியில்லையென்றால் ஆஸ்பத்திரை சிம்பலையும்

தேர்வு செய்யவும். சண்டை போட்டிருந்தால் சமாதன

புறாவை அனுப்பலாம்.


நான் சமாதான புறாவையும் பின்புறம் நீல வண்ணத்தையும்

தேர்வு செய்து உள்ளேன்.


உங்கள் வாழ்த்தை இரண்டு வரிகளிலும் தகவலை

எட்டு வரிகளிலும் அமைக்கலாம்.



கடைசியாக உங்கள் பெயரையும் உங்கள் இ-மெயில்

முகவரியையும் பதிவு செய்யவும்.


அதன் கீழே நீங்கள் அனுப்ப விரும்புவரது

இ-மெயில் முகவரிபதிவு செய்யவும்.

நீங்கள் தகவலை அன்றே அனுப்ப

வேண்டும் என்றால் Send அனுப்பவும். இல்லை

உங்கள்வாழ்த்தை வரும் 15 நாட்களுக்குள்

அனுப்ப வேண்டும்என்றால் இன்றிலிருந்து

அடுத்து வரும் 15 நாட்களில்

ஒன்றை தேர்வு செய்து அனுப்பிவிடவும்.

உங்கள் மலர் கொத்தை இந்த சாப்ட்வேர்

குறிப்பிட்ட நாள் அனுப்பிவிடும்.

இந்த இலவச சாப்வேரின் தள முகவரி:-


வாழ்த்துக்களுடன்,

வாழ்க வளமுடன்:,

வேலன்.


இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் மாற்றும் சமயம் அன்றைய காலண்டரின் தேதியை
சிலிண்டரின் மேற்புறம் ஒட்டி விடவும். சிலிண்டர் எவ்வளவு நாள் பயன்பட்டது என சுலபமாக
அறிந்து விடலாம்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...