Showing posts with label google. Show all posts
Showing posts with label google. Show all posts

வேலன்-விரும்பிய ப்ரோகிராமில் நினைவுகுறிப்புகளை எழுத



பொதுவாக டெக்ஸ்டாப்பில் -டாக்ஸ்க்பாரில் நோட்ஸ் எழுதிவைதது அதை நமக்கு குறிப்பிட்ட நேரத்தில் நினைவுபடுத்த நிறைய சாப்ட்வேர்கள்உளளது. ஆனால் குறிப்பிட்ட ப்ரோகிராம் -வேர்ட் -எக்செல் -இமெயில் -போட்டோஷாப் நோட்பேட் -என எதில் தேவையோ அதில் மட்டும் நினைவுபடுத்தும் சாப்ட்வேர் ஆக இது உள்ளதுஇலவச மென்மொருளில் 4 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.வேர்டில் குறிப்பு எழுதியது வந்த விண்டோ கீழே-
புகைப்படத்தில் குறிப்பு எழுதி பின்னர் ஒப்பன செய்யும் சமயம் வந்த விண்டோகீழே-
இதன் பயன்கள் ஆங்கிலத்தில் கீழே-

  • Annotate Firefox, Interne-Explorer and all other website-browsers with Your note.
  • Annotate Word, Excel, Images and all other documents with your personal comment.
  • Set a timer to get your note back on the surface.
  • Share notes with colleagues and friends

இதன் வீடியோ தொகுப்பு கீழே-



பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-பிளாக்கில் புகைப்படத்திலிருந்து லிங்க் கொடுக்க



சில பதிவுகளில் பார்த்திருக்கலாம். அதில் வரும் புகைப்படங்களின் மீது நாம் கர்சரை வைத்து கிளிக் செய்யும் சமயம் அந்த புகைப்படம் சம்பந்தமான இணையதளம் செலலும். அதை எவ்வாறு நமது பிளாக்கில் கொண்டுவருவது என்று பார்க்கலாம்.
முதலில் தேவைப்படும் புகைப்படத்தை பிளாக்கில் கொண்டுவந்துவிடுங்கள்.
பின்னர் HTML ஐ திருத்து கிளிக் செய்துகொள்ளுங்கள்.
புகைப்படத்திற்கான இமெஜ் முகவரி இருக்கும் . அதற்கு முன்னர் கீழ்கண்ட வரிகளை சேர்த்து விடுங்கள்.
மேலே உள்ள பாக்ஸில் திருக்கழுக்குன்றம் பிளாக் ஸ்பாட் என்கின்ற இடத்தில் உங்களுக்கு தேவையான லிங்க் முகவரியை நிரப்பிக்கொள்ளுங்கள். அதைப்போல் புகைப்படம் முடியும் இடத்தில் படத்தில் உள்ள கடைசி வரிகளை தட்டச்சு செய்து கொள்ளுங்கள்.  கீழே உள்ள புகைபடத்தை நீங்கள் கிளிக் செய்தால் அது திருக்கழுக்குன்றம் பிளாக்குக்கு செல்லும்.
அதைப்போல கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்தால் அது வாழ்த்தலாம் வாங்க பிளாக்குக்கு செல்லும்.

து சற்று குழப்பமாக இருந்தாலும் ஒரு முறைக்கு இரண்டு முறை பயன்படுத்திப்பாருங்கள். சரியாக வரும்.
வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-கூகுள் குரோம் -புக்மார்க்கை சேமிக்க


 கூகுள் குரோம் ப்ரவுசர் உபயோகிக்கும் நண்பர்களே-ஒரு நிமிடம்..! நீங்கள் சில சமயங்களில் கம்யூட்டரில் ஓ.எஸ் மாற்றினாலும் சரி -கூகுள்குரோம்ப்ரவுசரை( ரீ-இன்ஸ்டால்)மாற்றினாலும் சரி-கூகுள் குரோமில் உள்ள புக்மார்க்குகள் அழிந்து போகும். அவவாறான சமயங்களில் நீங்கள் புக்மார்க்குகளை தனியே போல்டரிலசேமித்துமீண்டும்பழையபடிகொண்டுவந்துவிடலாம்.
அதைஎவ்வாறு கொண்டுவருவது என்று இன்று பாரக்கலாம். முதலில் ப்ரவுசரை திறந்து கொள்ளுங்கள்.வலது மூலையில் உள்ள ஸ்பேனர் போன்ற படத்தின் அருகில் உள்ள சிறிய முக்கோணத்தை கிளிக் செய்யுங்கள். அல்லது கீ - போர்டில் Ctrl+Shift+B என்று கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் உள்ள Bookmark Manager என்பதை தேர்வு செய்யுங்கள். 
கீழ்கண்ட விண்டோ வரும். 

அதில நீங்கள் சேமித்துள்ள புக்மார்க்குகள் அனைத்தும் தெரியும். அதில் உள்ள Organize என்பதின் எதிரில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்யுங்கள்.வரும் விண்டோவில் Export BookMarks கிளிக் செய்து நீங்கள் புக்மார்க்கை சேமிக்க விரும்பும் இடத்தை தேர்வு செய்து அதற்கு ஒரு பெயரையும் கொடுத்து சேமித்து்க்கொள்ளுங்கள்.அவ்வளவுதான் உங்கள் புக்மார்க்குகள் தனியே சேமித்துவைத்துவிட்டோம். இப்போது நீங்கள் ஒ.எஸ் மாற்றினாலும் சரி - ப்ரவுசரை மீண்டும் இன்ஸ்டால் செய்தாலும் சரி..கவலையில்லை. சரி இப்போது மீண்டும் எப்படிஇதில புக்மார்க்குகளை கொண்டுவருவது...அது ஒன்றும் ப்ரச்சனையில்லை.முன்பு செய்தவாறே சென்று இப்போது 
ImportBookmarksஎன்பதைதேர்வுசெய்துநீங்கள்சேமித்துவைத்துள்ள
இடத்தில்இருந்துபுக்மார்க்கைகொண்டுவந்துவிடலாம்.
பயன்படுத்திப்பாருங்கள். 
கருத்தினை கூறுங்கள். 
வாழ்க வளமுடன்,
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

இ-மெயிலில் பூங்கொத்து அனுப்ப


இ-மெயிலில்பூங்கொத்து வாழ்த்துக்களை அனுப்பலாம்.

வழக்கமாக நாம் நண்பர் மற்றும் உறவினர்களுக்கு

வாழ்த்துக்களை இ-மெயிலில் அனுப்புவோம்.

ஆனால் இதையே வித்தியாசமாக பூங்கொத்துடன்

அனுப்பினால் பெறுபவர்கள் மிகுந்த மகிழ்சிஅடைவார்கள்.


முதலில் இந்த சாப்ட்வேரை நிறுவிக்கொள்ளவும்.

உங்களுக்கு இந்த மாதிரி முன்பக்கம் ஓப்பன் ஆகும்.


நீங்கள் அனுப்ப விரும்பும்பூங்கொத்தின் அடிப்பாகம் முதலில்

தேர்ந்தேடுங்கள்.






கூடுதல் புகைப்படங்களுக்கு More அழுத்தவும்.

வேண்டிய படத்தை தேர்வு செய்த பின் அதற்கு

மேற்புறம்பூச வேண்டிய வண்ணத்தை தேர்வு

செய்யவும். சரிபூங்கொத்தின் அடிப்பாகம்

ரெடி செய்து விட்டீர்கள் அல்லவா.

அடுத்து நீங்கள் இடப்புறம் உள்ள

மலர் வகைகளில் தேவையானதை தேர்வு

செய்யுங்கள்.




மலர்கள் தவிர இலை- இதர டிசைன் எது தேவையோ

அதை தேர்வு செய்யுங்கள்.பூங்கொத்து விருப்பமானதை

அலங்கரித்தபின் அடுத்து வலப்புறம் உள்ள டிசைனில்

சூழ்நிலைக்கு ஏற்ப டிசைன் ஒன்றை தேர்வு செய்யவும்.

அதற்கு பின்னணி வண்ணத்தையும் தேர்வு செய்யவும்.





பிறந்த நாள் என்றால் பரிசு பெட்டியையும் உடல்நிலை

சரியில்லையென்றால் ஆஸ்பத்திரை சிம்பலையும்

தேர்வு செய்யவும். சண்டை போட்டிருந்தால் சமாதன

புறாவை அனுப்பலாம்.


நான் சமாதான புறாவையும் பின்புறம் நீல வண்ணத்தையும்

தேர்வு செய்து உள்ளேன்.


உங்கள் வாழ்த்தை இரண்டு வரிகளிலும் தகவலை

எட்டு வரிகளிலும் அமைக்கலாம்.



கடைசியாக உங்கள் பெயரையும் உங்கள் இ-மெயில்

முகவரியையும் பதிவு செய்யவும்.


அதன் கீழே நீங்கள் அனுப்ப விரும்புவரது

இ-மெயில் முகவரிபதிவு செய்யவும்.

நீங்கள் தகவலை அன்றே அனுப்ப

வேண்டும் என்றால் Send அனுப்பவும். இல்லை

உங்கள்வாழ்த்தை வரும் 15 நாட்களுக்குள்

அனுப்ப வேண்டும்என்றால் இன்றிலிருந்து

அடுத்து வரும் 15 நாட்களில்

ஒன்றை தேர்வு செய்து அனுப்பிவிடவும்.

உங்கள் மலர் கொத்தை இந்த சாப்ட்வேர்

குறிப்பிட்ட நாள் அனுப்பிவிடும்.

இந்த இலவச சாப்வேரின் தள முகவரி:-


வாழ்த்துக்களுடன்,

வாழ்க வளமுடன்:,

வேலன்.


இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் மாற்றும் சமயம் அன்றைய காலண்டரின் தேதியை
சிலிண்டரின் மேற்புறம் ஒட்டி விடவும். சிலிண்டர் எவ்வளவு நாள் பயன்பட்டது என சுலபமாக
அறிந்து விடலாம்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...