வேலன்:-டிரைன் செல்லும் பாதையை உடனுக்குடன்அறிந்துகொள்ள

உறவினர்கள்-  விருந்தினர்களை டிரைன் ஏற்றிவிட்டாலும் சரி அவர்கள் ஊரிலிருந்து வந்தாலும் சரி...அவர்கள் டிரைனில் எந்த ஊரில் வந்து கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் வரும் ஊருக்கு அருகாமையில் உள்ள ஸ்டேஷன் பெயர் என்ன? குறிப்பிட்ட ஸ்டேஷனுக்கு டிரைன் வரும் நேரம் என்ன,? டிரைன் எவ்வளவு நேரம் காலதாமதமாக வருகின்றது என அனைத்து விவரங்களையும் நாம் இந்த இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம். பொதுமக்கம் வசதிக்காக இந்திய ரயில்களின் இயக்கத்தினை ஆன்லைன் மூலம் மேப் (வரைபடம்)பில் அறிந்து கொள்ள ரயில்வே துறை இந்த இணையதளத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதள் முகவரி காண இங்கு கிளிக் செய்யவும். இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் டிரைன் மற்றும் ஸ்டேஷன் என இரண்டு டேப்புகள் கொடுத்துள்ளார்கள். 
உங்களுக்கு டிரைன் பெயர் மற்றும் டிரைன் எண் தெரிந்தால் அதில் உள்ள விண்டோவில் தட்டச்சு செய்து கோ கொடுங்கள். உங்களுக்கான அடுத்த விண்டோ ஓப்பன் ஆகும்.நீங்கள் குறிப்பிட்ட ஸ்டேஷனில் இருந்தால் அந்த ஸடேஷனில் அடுத்து வரும் டிரைன் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.நான் இப்போது கீழே உள்ள விண்டோவில் டிரைன் எண் கொடுத்துள்ளேன். 
இதில் முதல் ஸ்டேப் வரும் ...பின்னர் உங்களுக்கான டிரைனை கிளிக் செய்து இதில் உள்ள  நெக்ஸ்ட் பட்டனை அழுத்தவும். இப்போது உங்களுக்கு அடுத்த ஸ்டேப் வரும். இதில் டிரைன் புறப்பட்ட நேரம்,சேரும் நேரம் அறிந்துதுகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
முன்றாவது ஸ்டெப்பில் நாம் டிரைனின் அப்போதைய நிலவரம் அறிந்துகொள்லாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். டிரைன் எந்த லோகேஷனில் உள்ளது என்பதனையும் எந்த ஸ்டேஷனை கடந்துள்ளது அடுத்து வரவிருக்கும் ஸ்டேஷன் விவரத்தினையும் எளிதில அறிந்துகொள்ளலாம்.
இதில் உள்ள ஸ்டேப் 4 அழுத்த உங்களுக்கு கூகுளின் மேப் ஓப்பன் ஆகும். இதில் உங்களுக்கான டிரைன் எந்த இடத்தில் வந்துகொண்டு இருக்கின்றது என்கின்ற விவரமும் டிரைன் பாதை மஞ்சள் நிறத்திலும் தெரியவரும். மேலும் இதில் பாப்அப்பாக வரும் விண்டோவில் அன்றைய தேதி,உங்கள் டிரைன் விவரம்,கடந்து சென்ற ஸ்டேஷன்;,தாமதமாக வந்தால் தாமதமான நேரம:.டிரைன் நிற்கும் அடுத்த ஸ்டேஷன் போன்ற விவரங்கள்தெரியவரும். 
இந்த மேப்பில் நீங்கள் இந்தியாவின் எந்த இடத்தினையும் கிளிக்செய்து அந்த இடத்தில் அந்த நேரத்தில் எந்த டிரைன் போகின்றது என்கின்ற விவரங்களை அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். நீலம் மற்றும் சிகப்பு நிற அம்புகுறிகள். இருக்கும்.
கீழே உள்ள புகைப்படத்தினை பாருங்க்ள. அதில் இந்திய  அளவில் மொத்தமாக அப்போது எத்தனை டிரைன்கள் ஓடுகின்றது..அதில் எவ்வளவு டிரைன்கள் சரியான நேரம் எவ்வளவு டிரைன்கள் காலதாமதமாக வந்து கொண்டு இருக்கின்றது என்கின்ற புள்ளிவிரங்களை மேலே தோன்றும் விண்டோ மூலம ;அறிந்துகொள்ளலாம்.
இதில் கூடுதல் வசதி என்ன என்றால் லைவ் ஆக ஒரு டிரைன் எந்த இரயில் நிலையங்களுக்கு இடையில் சென்று கொண்டு இருக்கின்றது.எவ்வளவு நேரம் தாமதமாக வருகின்றது.அடுத்த நிறுத்தம் எந்த ஸ்டேஷன். மேலும் எந்த எந்த ஸடேஷன்களில் இது நின்று செல்லும் என்ற விவரங்களை ஆன்லைன் மூலம் உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். மேலும் டிரைன்களின் இயக்கத்தினை ஆன்லைனில் இந்திய வரைபடத்தில் கூகுள் வரைபடம் மூலம் அறிந்துகொள்ளலாம்.டிரைன் புறப்படும் இடத்திலிருந்து சேரும் வரை உள்ள இடங்கள்,ரயில் நிலையங்கள்.அம்புக்குறியுடன் நாம் காணலாம்.
இனி யாரை வேண்டுமானாலும் டிரைனில் ஏற்றிவிட்டு அவர்கள் ;டிரைன் இப்போது எந்த ஸ்டேஷன் போய்கொண்டு இருக்கின்றது. அடுத்து எந்த ஸ்டேஷன் வரும் என்கின்ற விவரங்களை கொடுத்துக்கொண்டே இருக்கலாம். செல்போன் மூலமும் நாம் தகவல்களை அறிந்துகொள்ளலாம். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். மற்றவர்களுக்கும் இந்த தளத்தினை பற்றி சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

இராஜராஜேஸ்வரி said...


"வேலன்:-டிரைன் செல்லும் பாதையை உடனுக்குடன்அறிந்துகொள்ள பயனுள்ள தளத்தின் அறிமுகத்திற்கு நன்றிகள..

Anonymous said...

thanks for your information. very useful one. I recommend to my friends to visit this post.

வேலன். said...

இராஜராஜேஸ்வரி said...

"வேலன்:-டிரைன் செல்லும் பாதையை உடனுக்குடன்அறிந்துகொள்ள பயனுள்ள தளத்தின் அறிமுகத்திற்கு நன்றிகள.ஃஃ

நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Anonymous said...
thanks for your information. very useful one. I recommend to my friends to visit this post.ஃஃ

நன்றி நண்பரே..தங்கள் பெயரை குறிப்பிட்டுஇருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
வாழ்க வளமுடன்
வேலன்.

gopi said...

அட... இது நல்லா இருக்கே... நன்றி சார்...:)

Rajasubramanian S said...

மிக்க நன்றி, வாழ்க வளமுடன்.

Related Posts Plugin for WordPress, Blogger...