வேலன்:-நேரத்தின் அருமை அறிந்துகொள்ள

சிலருக்கு வேலை செய்யும் சமயம் அனைத்தையும் மறந்துவிடுவார்கள்.. வீடு,மனைவி.குழந்தைகள்.உணவு என எதுவும் அவர்களுக்கு நினைவுக்கு வராது.அதே சமயம் குறிப்பிட்ட நேரத்தில் பைலை பார்ப்பதாகட்டும் இணைய தளம் பார்ப்பதாகட்டும் நமக்கு இந்த சின்ன சாப்ட்வேர் அலாரம் அடித்து நமக்கு உதவுகின்றது.4 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் Task Name  என்பதில் கிளிக் செய்ய நமக்கு Reminder.Open File.Open Web.Run Program.Play Music.Standby.Shutdown.Restart.Log off.Lock என 10 விதமான ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள்.Open File என்பதில் நமக்கு தேவையான பைலை தேர்வு செய்து நேரத்தை செட் செய்துவிட்டால் அந்த நேரத்தில அந்த பைலானது ஓப்பன் ஆகிவிடும்.
 குறிப்பிட்ட நேரத்தில் நாம் இணைய தளம் ஓப்பன்  செய்ய வேண்டும் என்றால் நேரத்தை செட்செய்து பின்னர் அதில் உள்ள Website பாக்ஸில் நமக்கு தேவைப்படும் யூஆர்எல் முகவரியை தட்டச்சு செய்து பின்னர் Create கிளிக் செய்யவும்.குறிப்பிட்ட நேரத்தில் நாம் எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் இணைய தளம் தானே ஓப்பன் ஆகிவிடும்.
 அதனைப்போலவே குறிப்பிடட நேரத்தில் நாம் பாடலை கேட்கவேண்டும் என்றால் நமது கம்யூட்டரில் உள்ள பாடலை தேர்வு செய்து கொள்ளலாம்.பாடலை அப்போழுதே கேட்கும் வசதியும் உள்ளது:.
குறிப்பிட்ட இணையதளத்தில் இருந்து வீடியோவினை பதிவிறக்கம் செய்கின்றோம். வீடியோ பதிவிறக்கம் ஆகும் வரை நாம் காத்திருக்கதேவையில்லை.இதில் உள்ள நேரத்தை செட் செய்து நமது கம்யூட்டரை ShutDown செய்துவிடலாம்.ரீ ஸ்டார்ட்.லாக் ஆப்.லாக் என செய்துகொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...