புகைப்படங்களை நாம் வெவ்வேறு காலங்களில் எடுத்திருப்போம்.அந்த பசுமையான நினைவுகளை நாம் அதில் குறித்துவைத்தால் சிலகாலம் கழித்து பார்க்கும் சமயம் பசுமையான நிகழ்வுகள் நினைவுக்கு வரும். 3 எம்.பி. கொள்ளளவுகொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும்.
இதில் நம்மிடம் உள்ள புகைப்படத்தினை தேர்வு செய்யவும். உங்களுடைய புகைப்படம் மேல் விண்டோவில் தெரியும். கீழே உள்ள விண்:டோவில் உங்களுக்கான போட்டோ பற்றிய குறிப்பை கீழே உள்ள விண்டோவில் தட்டச்சு செய்திடவும்.இதுபோல ஒவ்வொரு புகைப்படத்தினையும் அதனை பற்றிய குறிப்பிட்ட தகவல்களையும் நாம் தட்டச்சு செய்திடலாம்.ஒவ்வொரு புகைப்படத்தினையும் அதனைபற்றிய தகவல்களையும் குறிப்பிட்டவுடன் சேவ் கமெண்ட் என்பதனை கிளிக் செய்து சேவ் செய்திடவும்.இப்போது புகைப்படம் பற்றிய தகவல்கள் சேமிப்பாகும் தேவைப்படும் சமயம் எடுத்து பார்த்து பழைய நினைவுகளில் முழ்கிவிடலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment