நமது கணினியில் உள்ள வேர்ட்.எக்ஸெல்,பவர்பாயிண்ட்,பிடிஎப் போன்ற பைல்களை பார்வையிட.படிக்க.கடவுச்சொல் கொடுத்து பா துகாக்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதன் வலதுபுறம் வேர்ட்.எக்ஸெல்.பவர்பாயிண்ட்,பிடிஎப் போன்ற அப்ளிகேஷன்களின் ஐகான்கள் இருக்கும். இதில் எது தேவையோ அதனை ;கிளிக் செய்யவும்.
வேர்ட் ஐகானை கிளிக் செய்தால் அதற்கான பைல்கள் மொத்தம் திறக்கும்.
இந்த விண்டோவில் கீழே உள்ள ஆல் என்கின்ற ஐகானை கிளிக் செய்தால் நமது கணினியில் உள்ள வேர்ட்,எக்ஸெல்,பவர்பாயிண்ட்,பிடிஎப் என அனைத்து பைல்களும் டிரைவ் வாரியாக திறக்கும். தேவையானதை நாம் பார்வையிடலாம்.
இதன் மேல்புறத்தில் நிறைய டேப்புகள்கொடுத்துள்ளார்கள். அதில் ஹாட்டிஸ்க் டிரைவில் உள்ள பைல்களுக்கு மறுபெயர் வைத்தல்,இடம் மாற்றுதல்,டிரைவிலிருந்து வேறு டிரைவிற்கு மாற்றுதல்,போல்டரை இணைத்தல்,பைலினை மறைத்துவைத்தல்,பைலினை கடவுச்சொல் கொடுத்து பாதுகாத்த்ல் போன்ற பணிகளை செய்திடலாம்.மேலும் நமது பைல்களை பேக் அப் எடுத்தும் தேவையான இடத்தில் சேமிக்கு வைக்கும் வச்தியையும் இதில் கொடுத்துள்ளார்கள். கீழெ உள்ள விண்டேவில் பாருங்கள்.
குறைந்த நேரத்தில் அனைத்துவிதமான பணிகளையும் நாம் செய்திடலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment