வேலன்:-கணிணி செயல்களை பேக்கப் எடுக்க -abelssoft Backup.

கணிணியில் பயன்படுத்தும் பைல்களை நாம் தனியே பேக்கப் எடுத்துவைக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதன் இணையதளம் சென்று பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
புதிய பேக் அப் என்பதனை கிளிக்செயதிட அடுத்த விண்டோ ஒப்பன் ஆகும்.அதில் எந்த டிரைவினில நீங்கள் பேக்கப எடுக்கப்போகின்றீர்களோ அந்த டிரைவினை தேர்வ செய்திடவும். நீங்கள் அனைத்து டிரைவினையும் பேக்கப் எடுக்கவிரும்பினால் அனைத்தையும் தேர்வு செய்திடவும்.
 எந்தமாதிரியான பைல்களை நீங்கள் பேக்அப் எடுக்கவிரும்புகின்றீர்களோ அந்த வகையை தேர்வு செய்திடலாம் உதாரணத்திற்கு மல்டிமீடியாவில் பாடல்கள்.வீடியோ.புகைப்படம் என எது விரும்புகின்றீர்களோ அதனை தேர்வு செய்திடலாம். உங்களுக்கு மூன்றும் தேவைப்பட்டாலும் அனைத்தினையும் தேர்வு செய்திடலாம்.
 அதுபோல ஆபிஸ் அப்ளிகேஷனில் எது தேவையோ அதனைமட்டும் தேர்வு செய்திடலாம். உங்களுக்கு அனைத்தும் தேவையென்றாலும் அனைத்தையும் தேர்வு செய்திடலாம்.
 பேக்அப்எடுக்கும் பைல்களை தனியே பாஸ்வேர்ட் கொடுத்தும் பாதுகாக்கலாம்.இதனால் மற்றவர்கள் பார்;வையிலிருந்து உங்கள் பைல்களை பாதுகாக்கலாம்.
இறுதியாக பேக்அப் எடுக்கப்பட்ட பைல்களை நீங்கள் ;தனியே பென்டிரைவிலோ அல்லது கணிணியிலேயே வேறு ஒரு டிரைவிலோ சேமிததுவைக்கலாம்.தேவைப்படும் சமயம் பேக்அப் எடுக்கப்பட்ட பைல்களை எடுத:துபயன்படுத்தலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...