நவீன யுகத்தில் இப்போது ஒளிப்படங்கள் நிறைய எடுக்கின்றோம். அதனை எஃபெக்ட்டுடன் சேர்த்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இந்த முகவரிக்கு செல்லவும். இதனை நிறுவியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ திறக்கும்.
இதில் 5 வகையான படிகள் கொடுத்துள்ளார்கள்.
நம்மிடம் உள்ள ஒளிப்படங்களை தேர்வு செய்யுங்கள். ஃபோல்டரில் உள்ள மொத்த ஒளிப்படங்களையும் தேர்வு செய்திடலாம்.
ஒளிப்படங்களை தேர்வு செய்தபின்னர் உங்களுக்கான விண்டோ திறக்கும்.அதில் நீங்கள் தேர்வு செய்த ஒளிப்படங்களை காணலாம்.ஒளிப்படங்கள் ஒன்றிலிருந்து மற்ற படத்துக்கு மாறும் நிலையில் வேண்டிய ஃஎபெக்ட்கள் கொண்டுவரலாம். உங்களுக்கான ஃஎபெக்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமானதை தேர்வு செய்ய அதன் எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்திட உங்களுக்கான ஃஎபெக்ட் தேர்வாகும்.
படங்காளுக்கான பின்புல படத்தினை நீங்கள் தேர்வு செய்திட கீழே உள்ள விண்டோவில் பா ருங்கள்.
நீங்கள் தேர்வு செய்திடும் படங்கள் உங்களுக்கு முன்னோட்டமாக பக்கத்தில் உள்ள விண்டோவில் தெரியவரும்.
ஒளிப்படங்களில் எழுத்துரு சேர்க்கவும் யூடியூப் வீடியோக்களை சேர்க்கவும் இதில் வசதி செய்யப்பட:டுள்ளது.எல்லா பணிகளும் முடிந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோவில் உங்களுடைய மொத்த ஒளிப்படங்களும் பணி முடிந்த ஒளிப்பட விவரங்களும் தெரியவரும்.
ஒளிப்படங்களின் முன்னோட்டத்தினை நாம் காணலாம்.
இறுதியாக நீங்கள் ஒளிப்படங்களின் தொகுப்பினை உங்கள் கணினி ஹார்ட்டிஸ்கில் சேமிக்கலாம்.
இதில் உள்ள செட்டிங்ஸ ;படடனை கிளிக் செயதிடவும். மேலும் இதில் உள்ள பப்ளஷ் பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கான யுஆர்எல் முகவரிகிடைக்கும். அதனை மற்றவர்களுக்கு அனுப்பி உங்களுடைய ஒளிப்படங்களை மற்றவர்களுடன் பார்த்து மகிழலாம். பயன்படுத்திப்பர்ருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment