வேலன்:-நமது புகைப்படங்களில் அனிமேஷன் ஸ்கரீன்சேவரை உருவாக்க-Animated Screensevar Maker

நாம் நமது கணிணியில் விதவிதமான வால்பேப்பர்களை ஸ்கிரீன்சேவராக வைத்திருப்போம். அதுபோல விதவிதமான அனிமேஷன் ஸ்கிரீன்சேவரும் இணையத்தில் அதிகம் உள்ளது. ஆனால் நமது விருப்பமான புகைப்படத்தினை அனிமேஷன் ஸ்கிரீன்சேவராக வைத்திருக்க இந்த இணையதளம் உதவுகின்றது.22 எம்.பி.கொள்ளவுகொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்து  இந்த இணையதளம் செல்லவும். இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் ;செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் அவர்களே சில ஸ்கிரின்சேவர் மாடல்கள் வைத்துள்ளார்கள். அதுதவிர நமக்கு விருப்பமான ஸ்கேரின் சேவரின் படத்தினை நாம் கணிணியில் இருந்து தேர்வு செய்திடவும்.
 நாம் விரும்பும் புகைப்படம் வந்துவிட்டது. இதில் பின்புறம் மமாற்றவேண்டுமானால் மாற்றலாம். இசைகளை சேர்க்கலாம்.
 இதன் மேல்புறம் உள்ள டேபில் ஆட்அனிமேஷன் என்கின்ற டேப் கொடுததுள்ளார்கள். அதனை கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் விதவிதமான அனிமேஷன் படங்கள் கொடுத்துள்ளார்கள். ஒவ்வொன்றையும் நீங்கள் ப்ரிவியூ பார்தது பயன்படுத்தலாம்.
 அதுபோல இங்குள்ள டேபில் அனிமேஷன் எபெக்ட் கொடுத்துள்ளார்கள். நமது புகைப்படத்தில் தண்ணீர் அலைகள் வருவது போலவும் நெருப்பு பற்றிஎரிவது போலவும் உலக உருண்டையாக படங்கள் மாறுவதுபோலவும். நீர் குமிழிகள் வருவது போலவும் கொடுத்துள்ளார்கள்.


 இதில் எந்த எபெக்ட் உங்களுக்கு பிடித:துள்ளதோ அதனை தேர்வு செய்துகொள்ளலாம்.மேலும் விதவிதமான பிரஷ் டூல்கள்.எழுத்துருக்கள்.குறிப்பிட்ட இடத்தினை ஹைலைட் செய்து காண்பித்தல்:போன்ற எபெக்ட்களை கொண்டுவரலாம்.
உங்களுக்கு நிறைவான புகைப்படம் அனிமேஷன் மூலம் கிடைத்ததும் ப்ரிவியூ பார்தது மாற்றங்கள் செய்யவேண்டுமானால் செய்து பின்னர் சேமித்து பயன்படுத்தலாம். மற்றவர்களுக்கும் கொடுக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...