நமது கணிணியில் உள்ள நகல் பைல்களை தேட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள அம்புகுறியை கிளிக்செய்திட உங்களுக்கு உங்கள் கணிணியில் உள்ள டிரைவ்கள் காண்பிக்கும். இதில் எந்த டிரைவில் உள்ள நகல் பைல்களை தேட விரும்புகின்றீர்களோ அந்த டிரைவினை தேர்வு செய்யவும். அனைத்து டிரைவினையும் தேர்வு செய்து பைல்களை தேடலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.வரும் விண்டோில் நீங்கள் டாக்குமெண்ட்கள்..இசை.வீடியோ.போட்டோ,ஜிப் பைல்கள் போன்ற எட்டு வகையான பைல்களில் நமக்கு தேவையானதையோ அல்லது மொத்தத்தினையுமோ தேர்வு செய்யலாம்.
தேடுதலில் உள்ள ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.
கடைசியாக உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்களுக்கான நகல்பைல்கள் உங்களுக்கு கிடைக்கும். தேவையானதை வைத்துக்கொண்டு மற்றதை நீங்கள் நீக்கி விடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment